ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானமற்ற கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சர்-இ-புல் மாகாணத்தின் சங்கராக் மாவட்டத்தில் 80 சிறுமிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு உள்ளூர் பள்ளிகளில் விஷம் கலந்த உணவுகளில் பரிசோதனை நடந்தது. ஆனால் இதற்கான காரணங்கள் தெரியவில்லை. எனினும் சிறுமிகளின் உடல்நிலை குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. கடந்த மே மாதத்திலும் குடிநீரில் விஷம் கலந்த சம்பவம் அரங்கேறியது.