கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி அனுமதிக்கப்பட்ட 19 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மிஞ்சி உள்ள 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கவலைக்கிடமாக இருப்பவர்களில் 10 பேருக்கு வெண்டிலெட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மருத்துவமனையில் 24 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.