இந்தியாவில் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி 16வது தவணை வழங்கப்பட்டது.

இதுவரை 2000 ரூபாய் வங்கி கணக்கில் பெறாத விவசாயிகள் பி எம் கிசான்  திட்டத்தின்  PM Kisan Yojana – pmkisan.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்களுடைய நிலையை சரிபார்த்து இதற்காக புகார் அளிக்கலாம். புகாரை பதிவு செய்வதற்கு [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு சென்று அல்லது 1800-115-526 இந்த கட்டணமில்லா எண், 011-24300606,155261  உதவி எண் ஆகியவற்றில் அழைத்து தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது