தமிழ் சினிமாவில் சென்ற மாதம் ராங்கி, டிரைவர் ஜமுனா, கனெக்ட் உட்பட பெண்களை முதன்மைபடுத்தும் கதாபாத்திரங்களை கொண்ட பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள இந்த படங்களின் பேனர்களை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, ”தமிழ் சினிமா முன்னேற்ற பாதையில் போகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று நினைத்து பார்க்க முடியாது” என பகிர்ந்திருந்தார். அதன்பின் இந்த போஸ்டர்களை பார்த்த சமந்தா பெண்கள் எழுச்சி பெறுகின்றனர் என்ற பதிவை பகிர்ந்து இருந்தார். அதற்கு ஒரு நபர் ”ஆமாம் பெண்கள் எழுவது விழுவதற்காகத் தான்” என எதிர்மறையாக பதில் கூறி இருந்தார். தற்போது அந்நபருக்கு சமந்தா பதிலடி கொடுக்கும் விதமாக கூறியதாவது ”விழுந்து மீண்டும் எழுவது மேலும் வலிமையாக்கும் நண்பரே” என தெரிவித்துள்ளார்.