தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொய்யுண்டார் கோட்டை பல்லாக்குளம் தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காவியா அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு சுவர் இடிந்து காவியாவின் தலைமீது விழுந்தது.

இதனால் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காவியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.