அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிச்சனூர் கிராமம் அருகே சென்றபோது திடீரென காயத்ரிக்கு பிரசவ வலி அதிகரித்தது.

இதனால் மருத்துவ நிபுணர் முத்துக்குமரன் காயத்ரிக்கு பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும், சேயும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.