
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதாவது விமானம் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடினார் என்றும் அதனால் விமானம் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணிகள் சோதனை செய்யப்பட்ட பிறகு விமானம் கிளம்பி சென்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி இருந்தார். அதன் பிறகு அண்ணாமலை தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது.
இதற்கு அண்ணாமலை எவ்வித விளக்கவும் கொடுக்காமல் இருந்த நிலையில், தேஜஸ்வி சூர்யா மற்றும் அண்ணாமலை இணைந்து தான் விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை திறந்தனர் என்று குற்றசாட்டு எழுந்தது. இந்த சம்பவம் உண்மை என்று இண்டிகோ நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யாவிடம் விசாரணை நடத்துவதற்கு DGCA உறுதி செய்துள்ளது. மேலும் இதேபோன்று 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதால் தற்போது அண்ணாமலை கைது செய்யப்படுவாரா? என்று தற்போது பரபரப்பு நிலவுகிறது.