அ.தி.மு.க நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் இன்று அ.தி.மு.க வினரால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா சென்னை தியாகனாய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர் கூறியதாவது, அ.தி.மு.க ஒன்றிணை வாய்ப்பு உள்ளது. தி.மு.க வை தோற்கடிக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அனைவரும் ஒன்றாக இணைந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சியினரை சந்திக்க எனக்கு என்ன பயம் இருக்கிறது? ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டம் இருக்கிறது. அவர்களை பார்க்க செல்லும் போது சொல்லிவிட்டு செல்கிறேன். அனைத்தும் சிறப்பாகவே நடைபெறும். பொருத்திருந்து பாருங்கள் என சசிகலா தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆளுநர் விவகாரம் குறித்து பேசிய அவர் ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு நடைமுறை இருக்கிறது. இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் ஒட்டுமொத்த மக்களுக்கு என்ன செய்ய முடியும் என கூறியுள்ளார்.