தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் பெரும் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், அன்பு இதயங்களே நான் 90 சதவீதம் குணமடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்து விட்டன. என்னமோ தெரியவில்லை நான் இப்போது முன்பை விட அதிக சந்தோசத்தை உங்களால் உணருகிறேன். வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 படத்தின் வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன் என அவர் கூறியுள்ளார்.