இன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா. இதனை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரணியாக சென்ற மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவர்கள் ஊர்வலமாக செல்லும்போது தளபதி வாழ்க ராஜராஜ சோழன் வாழ்க என்று கோஷமிட்டனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரியில் நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் முதல் மாநாட்டினை கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் சமீபத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் முடிவடைந்து நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தினர் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது கவனத்தை ஈர்த்தத்துள்ளது. மேலும் முன்னதாக நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் கொள்கை தலைவர்களாக அம்பேத்கர், பெரியார், அஞ்சலை அம்மாள் மற்றும் வேலுநாச்சியார் ஆகியோர்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.