தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவியும் தங்கியுள்ளார். இந்த மாணவி கடந்த 15ஆம் தேதி தன்னுடைய அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென யாரோ வந்து கதவை தட்டியுள்ளனர். அப்போது அந்த மாணவி கதவை திறந்த நிலையில் திடீரென ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் மாணவியை தள்ளிவிட்டு கதவை பூட்டிக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தார்.

அந்த மர்ம நபர் யார் என்று தெரியாத நிலையில் அவர் சென்ற பிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகளை உணர்ந்த மாணவி உடனடியாக 100-க்கு போன் செய்துள்ளார். உடனடியாக அந்த இடத்திற்கு தனிப்படை காவல்துறையினர் சென்ற நிலையில் மாணவி பலத்த காயங்களுடன் அங்கு கிடந்துள்ளார். அவரை மீட்டு காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் தேடி சென்றதால் அவர் தலைமறை வாகிவிட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.