தமிழக முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலை உட்பட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையாகவும் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (9 மணி வரை) 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், திருவள்ளூர், தி.மலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே, வெளியே செல்வோர் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.