விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம் மற்றும் சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலித்துள்ளதாக படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் இப்படம் உலக அளவில் 250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான 11 நாட்களிலேயே இந்த வசூல் சாதனையை ‘வாரிசு’ படைத்துள்ளதாக படக்குழு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது, ரூ. 250 கோடிக்கு ஆதாரம் இருக்குதா?. இது உலக மகா உருட்டா இருக்கிறதே. நீங்கள் ஏற்கனவே சொன்ன ரூ. 210 கோடி வசூலே பொய் என திருப்பூர் சுப்ரமணியன் கூறிவிட்டார். அதற்கு விளக்கம் கொடுக்காமல் ரூ. 250 கோடினு சொல்லியிருக்கீன்களே என்று கிண்டல் செய்கிறார்கள்.