உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp செயலியை 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். இந்த செயலியில் அடிக்கடி மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராமில் இருக்கும் வசதிகள் வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் மோசடிகள் என்பது அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக மெட்டா ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
அதாவது நாளுக்கு நாள் மோசடிகள் என்பது அதிகரித்து வருவதால் அதனை எப்படி தடுப்பது என்பது குறித்து பார்ப்போம். அதற்கு முதலில் whatsapp-க்குள் சென்ற அக்கவுண்ட் என்பதை அழுத்த வேண்டும். பின்னர் to step verification என்பதை தேர்வு செய்து 6 இலக்க எண்ணை தேர்வு செய்து பின்னை அமைக்கணும். இதைத்தொடர்ந்து மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் இதன் மூலம் யாராலும் உங்களுடைய whatsapp கணக்கை ஹேக் செய்ய முடியாது.