WhatsApp பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது ஏதேனும் ஒரு புது அம்சங்களை அந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் டெவலபர்கள் அச்செயலியில் பல புதிய அம்சங்களை உருவாக்க மற்றும் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது.
எழுத்துக்கள் வடிவம் மாற்றம்
இவ்வசதி வாயிலாக எழுத்துக்களின் வடிவத்தை நாம் மிக எளிதாக மாற்றிக்கொள்ள இயலும். புதியதாக அளிக்கப்பட்டுள்ள பாண்ட் ஆப்ஷனின் மீது டேப் செய்யும்போது அவற்றின் வடிவத்தை நமக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ள முடியும். இதன் காரணமாக பயனர்கள் தங்களுக்கு பிடித்தது போல் விதவிதமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் டெக்ஸ்ட் எடிட் செய்துக்கொள்ளலாம்.
இதனிடையில் வாட்ஸ்அப் ஆனது போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பும் போது அதன் தரத்தில் எவ்வித மாற்றமும் இன்றி அதே தரத்தில் அனுப்புவதற்கான புது அப்டேட்டை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரை வாட்ஸ்அப் வாயிலாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும்போது அதன் தரத்தில் சிறிதளவு இழப்பு ஏற்படுகிறது. வாட்ஸ்அப் இந்த அப்டேட்-ஐ வெற்றிகரமாக செயல்படுத்தும் சமயத்தில் இது ஒரு புது மைல்கல்லாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.