இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தேதி வாரியாக தேடல் வசதியை பயனர்களுக்கு whatsapp அறிமுகம் செய்துள்ளது. இதனை பயன்படுத்தி பயனர்கள் தேட விரும்பும் அரட்டையில் அல்லது குழுவில் தேதி வாரியாக அனுப்பிய செய்தியை எளிதாக பெற முடியும்.

இந்த வசதி மூலம் குறிப்பிட்ட தேதியில் அனுப்பிய வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் டாக்குமெண்ட்களை பயனர்கள் பெறலாம். இந்த புதிய வசதி ஐஓஎஸ், மே டெக்ஸ்ட் ஆப் மற்றும் whatsapp வெப் ஆகியவற்றில் முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்தது. தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த விருப்ப அட்டையில் அல்லது குழுவில் உள்ள search bar ஐ கிளிக் செய்து அதில் உள்ள நாள்காட்டி குறியீட்டை தேர்வு செய்து விருப்பத் தேதியை தேர்ந்தெடுத்து ok பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.