201 7- 2021-க்குள் வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்ய உத்திரபிரதேச அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்பட்ட சலான்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்.

மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வாகன சலான்களும் ரத்து செய்யப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்குவது, கார்களில் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட விதிமுறை மீறலுக்கு சலான் வழங்கி அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.