தமிழகத்தில் பெட்ரோல் ஆனது லிட்டருக்கு 103.63 பைசாவுக்கும், டீசல் 94.24 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் பொழுது அதன் மீட்டர் ஜீரோ வில் இருந்து தொடங்குகிறதா என்பதை கட்டாயமாக சரி செய்ய வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் பெட்ரோல் டீசலின் தரத்தையும் அறிந்து கொள்வது அவசியம். அதாவது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் பொழுது அதனுடைய டிஸ்ப்ளேயில் பெட்ரோல் மற்றும் டீசல் அடர்த்தி அளவு இடம் பெற்று இருக்கும். இதன் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் தர மதிப்பீட்டை முடிவு செய்து கொள்ளலாம். மத்திய அரசின் விதிப்படி, பெட்ரோலின் தர மதிப்பீடு 730 முதல் 800 kg per cubic meter வரையிலும் டீசலுக்கு 830 முதல் 900 kg per cubic meter வரையிலும் இருக்க வேண்டும். அதிக வெப்பநிலை காரணமாக இந்த தர மதிப்பீட்டில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மத்திய அரசின் விதிப்படி இதற்கு குறைவான தர மதிப்பீடு கொண்ட பெட்ரோல், டீசல் உங்களுக்கு வழங்கப்பட்டால் நிறுவனத்தின் மீது நம்மால் புகார் அளிக்க முடியும்.