கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3500 க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 4-வது நாளாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து நிற்கும் உறவினர்களுக்கு எனது பிரார்த்தனைகள். மேலும் பேரிடரின் போது மீட்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றும்  கூறியுள்ளார்.