கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். அந்த பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கேரளா அரசு இன்று மற்றும் நாளை 2 நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து கேரளா மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால் உடனடியாக 1070 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசும் தற்போது அறிவித்துள்ளது.