உலகம் முழுவதும் பொதுவாக ஆண்கள் விறைப்பு தன்மைக்காக வயகரா மாத்திரையை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த மாத்திரையின் உண்மையான பெயர் சில்தெனாபில். இந்த மாத்திரையை வயாகரா நிறுவனம் தயாரிப்பதால் அந்த நிறுவனத்தின் பெயரையே  மாத்திரைக்கும் வைத்து அழைக்கிறார்கள். இந்நிலையில் வயகரா குறித்து பலரும் நம்ப முடியாத ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி மருத்துவ உலகையே புரட்டிப் போட வைத்துள்ளது.

அதாவது ஆண்மை தன்மை அதிகரிக்க வயகரா மாத்திரையை எடுத்துக் கொள்ளும் நிலையில் தற்போது ஞாபகமறதி நோய்க்கும் அந்த மாத்திரை சிறந்த தீர்வாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்த மாத்திரையின் மூலம் வாஸ்குலார் டிமென்சியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறதாம். மேலும் இதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.