நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறிது நேரத்தில் மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது மாணவியின் சித்தி மகன் ரங்கராஜன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமின் கர்ப்பமானது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.