தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

அவ்வப்போது ‘லியோ’ படம் பற்றி ஏதேனும் ஒரு அப்டேட் எப்படியாவது வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது இந்த படத்தில் ‘த்ரிஷ்யம்-2’ பட நடிகை சாந்தி மாயாதேவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த் நடித்து வரும் நிலையில், தற்போது சாந்தி மாயாதேவியும் இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.