நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதில் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணம் ஏதும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. நுழைவுச்சீட்டு, பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.