வருகிற 28ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் இறுதி வரை அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் செப்டம்பர் இறுதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துறை சார்பாக ஒரு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 28ஆம் தேதி முதல் 2000 ருபாய் நோட்டுகளை பயணிகளிடம் இருந்து வாங்க வேண்டாம் என அனைத்து கிளை மேலாளர்கள் நடத்துனர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. அப்படி யாரேனும் வாங்கினால் சம்பந்தப்பட்ட நடத்துனரே அதற்கு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் இறுதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்று நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம், வங்கிகளில் அதனை டெபாசிட் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டு வந்தன. அதேபோல மின்வாரிய அலுவலகத்திலும் பணம் செலுத்தும் போது கட்டணம் செலுத்தும் போது 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.