இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டி20 போட்டிகளில் 3 தொடர்களிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டிகள் நடைபெறும் நிலையில் அண்மையில் நடைபெற்ற 1 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டிகள் டை-யில் முடிந்தது.

அதாவது முதலில் அந்த போட்டியில் பேட்டிங் செய்த இலங்கை அணி 230 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணிக்கு வெற்றி பெற 14 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.

அந்த கடைசி ஷாட்டை அடிக்க அர்ஷ்தீப் சிங் களமிறங்கினார். அவர் கடைசி ஷாட்டை சிக்ஸர் அடிக்க முயன்ற நிலையில். LBW முறையில் அவுட் ஆகி விக்கெட்களை பறி கொடுத்தார். இதனால் போட்டி TIE-ல் முடிந்தது. இதனால் அர்ஷ்தீப் சிங் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் போட்டி முடிவடைந்த பிறகு அர்ஷ்தீப் சிங்கை கேப்டன் ரோகித் சர்மா கோபத்தோடு பார்த்தார். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை. இருப்பினும் அதை பார்க்கும்போது உன்னை நம்பி களம் இறக்கியதற்கு இப்படி கவுத்திதிட்டியே என்று கேட்பது போல் இருக்கிறது. மேலும் ரோஹித் ஷர்மா கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான புகைப்படம் தற்போது இணையதளத்தில் மீம் மெட்டீரியல் ஆக மாறியுள்ளது.