
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி வழங்கப்படும் நிலையில் தற்போது அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கப்படும் கோதுமையின் அளவை உயர்த்தியது.
இதன் காரணமாக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அரிசிக்கு பதிலாக கோதுமையை இலவசமாக ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 20 கிலோ அரிசி வழங்கப்படும் நிலையில் மாநகராட்சி பகுதிகளில் அதற்கு பதிலாக 10 கிலோ கோதுமையும் பிற பகுதிகளில் 5 கிலோ கோதுமையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.