சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஸ்ரித்திகா. இவர் தற்போது மகராசி சீரியலில் அவருடன் கதாநாயகனாக நடித்த ஆர்யன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துள்ளதாகவும் விரைவில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னாள் கணவர் பெயருடன் இருக்கும் ஸ்ரித்திகா சனீஷ்  என்பதை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாற்ற முடியவில்லை எனவும் விரைவில் அது மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.