‘நான் சொன்னதுபோல் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழகத்தின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘இதில் அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல் பட்டியல் வெளியிடப்படும்.

இத்துடன் சேர்த்து வாட்ச் பில்லும் வெளியிடப்படும். இந்த பட்டியலை பார்த்தபின் யார் 420 என முடிவு பண்ணலாம்’அந்த நாளில் தான் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய தமிழ் புத்தாண்டு நாளாக கொண்டாடப்பட இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.