கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது “இப்போது தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. அதோடு மாநில அரசுகளுக்கு தடுப்பூசி அனுப்புவதையும் நிறுத்தி விட்டது.

இதன் காரணமாக கொரானோ தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி என்பது தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லை. தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனையில் இருப்பு இருந்தால் அதனை செலுத்திக்கொள்ளலாம். தேவையான அளவுக்கு கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க படுக்கை வசதிகள் தயாராக இருக்கிறது. கொரானோ பாதிப்பு அதிகரித்தாலும் ஊரடங்கு என்பது தற்போதில்லை” என அவர் தெரிவித்தார்.