யார் யாருக்கு ரூ.1000 இன்னும் வரவில்லை…..? இன்று(செப்-19) முதல் உதவிமையம் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையானது கடந்த 15ஆம் தேதி தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு கோடி பெண்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இன்னும் ஏராளமான பேருக்கு குறுஞ்செய்தி வந்தும் இன்னமும் பணம் வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு இன்று முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் என அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குக்கு தொகை வராமல் இருப்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம். நிராகரிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

Leave a Reply