அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தை சேர்ந்த டேவிட் ரஷ் என்பவருக்கு உலக சாதனைகள் படைப்பது என்பது அல்வா சாப்பிடுவது போல. ஏற்கனவே படைக்கப்பட்ட உலக சாதனைகளை தகர்ப்பதில் இவருக்கு தனிப்பட்ட சந்தோஷம். இவர் தனது வாழ்நாளில் இதுவரை 250க்கும் மேற்பட்ட உலக சாதனைகளை முறியடித்துள்ளார். இவர் ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.
ஆப்பிள்களை கடித்தல், குவளைகளில் பந்துகளை போடுதல், வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்து பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உதைத்தல் உள்ளிட்ட பதினைந்து வகைகளில் குறைந்த நிமிடத்தில் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த திறமை பலரையும் வியக்க வைத்துள்ளது.