விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் எடையாளம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த மூன்றாம் தேதி சக்திவேல் தனது நண்பர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விநாயகபுரம் கூட்டு சாலை அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சக்திவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சக்திவேல், ராஜா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.