தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது வருகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜூன் மாத இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கூறுகையில், “துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய இரண்டும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும்  பருப்பு, பாமாயில்  போன்ற அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி டெண்டர் கோருவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே பருப்பு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது என்றும்  விளக்கமளித்துள்ளது.