வட மாநிலங்களில் இந்து மத பண்டிகையான ராம நவமி சென்ற மாதம் 30ம் தேதி கொண்டாடப்பட்டது. அதன்படி பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் ராம நவமி பண்டிகையின்போது சிலர் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஒருசில பகுதிகளில் மத ரீதியிலான வன்முறை வெடித்தது. இந்து-இஸ்லாமிய மதத்தினர் இடையில் இந்த மோதல் வெடித்தது.

மேற்கு வங்காளத்தின் கவுரா மாவட்டம் ஷிப்பூர், காசிபரா பகுதிகளிலும், பீகாரின் சசாராம் பீகார் ஷெரிப் பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இருதரப்பும் மாறிமாறி கற்கலை வீசி தாக்குதல் நடத்தியதால் வன்முறை கலமாக மாறியது. இந்த நிலையில் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி பேசவேண்டுமென கபில் சிபல் எம்.பி தெரிவித்துஉள்ளார்.