தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது சென்னை பனையூரில் நடைபெறும் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தின் போது தற்போது 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக வக்பு வாரிய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து விஜய் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
அதாவது முஸ்லிம் மக்களின் உரிமைகளை வக்பு வாரிய சட்ட மசோதா பறிப்பதாக குற்றச்சாட்டு எழுவதால் உடனடியாக அந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் விஜய் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.