அதிமுக கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் சுந்தரம். இவருக்கு 73 வயது ஆகும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டார். இவருக்கு 72 வயது ஆகும் நிலையில் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக இறந்துவிட்டார்.

இவருக்கு அதிமுக மற்றும் திமுக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் அவர்களின் மறைவு செய்து கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். அவருடைய பிரிவால் வாடும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.