தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அதன்படி உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், சண்முகம் ஐஏஎஸ் மற்றும் அனுஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் தனிச் செயலாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தனித்தனியாக துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அனுஜார்ஜ் ஐஏஎஸ் சொந்த காரணங்களுக்காக விடுப்பு எடுக்க இருக்கிறாராம். இதன் காரணமாக இவரிடம் இருக்கும் 12 துறைகளிலும் மற்றும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் முதல்வர் ஸ்டாலின் பிரித்து வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உதயச்சந்திரன் ஐஏஎஸ்-க்கு கூடுதலாக 3 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உமாநாத் ஐஏஎஸ் அதிகாரிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு போன்ற துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் சந்திப்புகள், கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், சமூக சீர்திருத்தம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் துறை போன்றவைகள் சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.