தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம் எனவும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி ஐந்து பிரிவுகளில் நடத்தப்படுகிறது. சிலம்பம்,கபடி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.