மீண்டும் திமுகவில் இணைகிறாரா மு.க.அழகிரி…? வைரலாகும் டுவீட்…!!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாள் இன்று. ஆம்! 9 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு இதேநாளில் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் முதல் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இருப்பினும் அவர்  கட்சியை  தொடர்ந்து விமர்சித்து வந்ததால் திமுகவில் இருந்து 2014 மார்ச் மாதத்தில் நிரந்தரமாகவே நீக்கப்பட்டார். இதையொட்டி, தற்போது மு.க.அழகிரி தனது ட்விட்டரில், ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால் விஸ்வாசம் அது என்றும் மாறாது என்ற வாசகத்துடன் திமுகவின் கொடியை காரில் பறக்கவிட்டுள்ளார். இதன்மூலம், அவர் விரைவில் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.