மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரான ரிங்கி சக்மா (28) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சமீபத்தில் தன்னுடைய சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்களில் மக்களிடம் நிதி உதவி கோரினார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்திருக்கிறார். இவர் மிஸ் இந்தியா 2017 போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வானார். அதில் மானுஷி சில்லர் டைட்டில் வென்றார்.