பொதுவாகவே மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலை முதல் வங்கிகள் வரை பல மாற்றங்கள் நிகழும். அதன்படி மார்ச் 1 முதல் வரக்கூடிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். நடப்பு நிதியாண்டு மார்ச் மாதத்தில் சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு மற்றும் ஜிபிஎஸ் என பல மாற்றங்கள் வரவுள்ளது.

சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நெருங்குவதால் இந்த மாதம் சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி எஸ் டி விதிமுறை:

ஜிஎஸ்டி விதிகள் மார்ச் 1ஆம் தேதி இன்று முதல் மாறுகின்றது. அதன்படி இனி ஐந்து கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் வணிகர்கள், இ- இன்வாய்ஸ் இல்லாமல் இவே பில் உருவாக்க முடியாது. அதனைப் போலவே மாநிலங்களில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்களை விற்பதற்கு வர்த்தகர்கள் அனைவருக்கும் இ -பில் தேவை.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு:

எஸ் பி ஐ வங்கி தன்னுடைய கிரெடிட் கார்டுகளுக்கான குறைந்தபட்ச நாள் பில் கணக்கீடு செயல்முறையை மாற்றம் செய்துள்ள நிலையில் இந்த புதிய மாற்றம் மார்ச் 15 முதல் அமலுக்கு வருகிறது.

பேடிஎம் பேமெண்ட் வங்கி:

ரிசர்வ் வங்கி இந்த வங்கி மீது விதிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வங்கி விடுமுறை:

மார்ச் மாதம் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் அதற்கு ஏற்றவாறு மக்கள் தங்கள் வங்கி சார்ந்த வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள்