கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சீனாவில் மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் XXB.1.5 எனும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் தான் இந்த முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த வகை வைரஸ் தான் அமெரிக்காவில் இப்போது பரவியுள்ள பாதி கொரோனா நோய் தொற்றுக்கு காரணம். இதன் காரணமாக குஜராத் அரசானது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதனை தொடர்ந்து அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிலும் விமான நிலையங்களில் தீவிர கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்தி இருக்கிறது. ஆகவே இந்த மாதத்தில் அனைத்து மாநில அரசுகளும் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.