2023 ஜனவரி-1 புத்தாண்டு தினமான இன்று முதல் பல்வேறு முக்கிய விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அது குறித்த சில மாற்றங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில், பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த வேலையை நீங்கள் இன்னும் செய்துமுடிக்கவில்லை எனில் உடனே செய்து விடுங்கள். எனினும் அதை இணைப்பதற்கான வரம்பு ஏப்ரல் 2023 ஆகும்.

இதையடுத்து ஜனவரி 1 இன்று முதல் Windows 7 மற்றும் 8.1க்கான புது Chrome பதிப்புகளுக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு நிறுத்தப்படும். அதன்படி, இந்த பதிப்புகளைக் கொண்ட மடிக்கணினிகளில் இனிமேல் பயனர்கள் க்ரோம் ப்ரவுசரை பயன்படுத்த இயலாது. இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டு உள்ளது.

அதன்பின் GST விதிகளும் ஜனவரி-1 இன்று முதல் மாறும். 5 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் இருக்கும் வணிகர்கள் மின் விலைப் பட்டியல்களை (இ-இன்வாய்ஸ்) உருவாக்குவது தற்போது அவசியமாகிறது. அதனை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் முதல் தேதி மறு ஆய்வு செய்யப்படுகிறது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்கிறது (அ) அதிகரிக்கிறது.