தமிழகத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவர், தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அதிகாரம் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். மாநில உரிமைகளை மீட்க போராடுவோம், குறுக்கே வரும் தடைகளை தகர்த்து நம் பயணம் வெற்றி கரமாக தொடர்ந்து கொண்டே இருக்கும். சரித்திரத்தில் நமக்கு கிடைக்கும் இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.