கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் ஜி.எஸ். சயந்த் (15) என்ற மாணவர் வசித்து வருகிறார். இந்த மாணவர் கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு (ADHD) போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த மாணவர் தற்போது 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை செல்லும் மின்சார சைக்கிளை கண்டுபிடித்துள்ளார்.
இந்த மாணவர் இரண்டாம் வகுப்பிலிருந்து சைக்கிளில் செல்லும் நிலையில் தான் சோர்ந்து விட்டதன் காரணமாக தற்போது BLDC மோட்டார், பைக் செயின், பேட்டரி மற்றும் சுவிட்சுகள் போன்றவற்றை சேர்த்து மின்சார சைக்கிளை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.