விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு நகரமன்ற தலைவர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

மேலும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர், பயிற்றுனர், சிறப்பு ஆசிரியர்கள், மருத்துவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், நகரமன்ற கவுன்சிலர்கள் என பலர் பங்கேற்றார்கள்.