நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதிய தொகை வீட்டிலேயே வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளார்.