சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முருகன் (62) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் படித்த 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முருகனை காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியான நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதோடு பாலியல் தொல்லை மற்றும் தீண்டாமை குற்றங்கள் போன்றவைகளுக்காக தனியாக 47 ஆண்டுகள் சிறை தண்டையும் விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 69 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததோடு தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.