தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, நாகை ஆகிய 13 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டத்திலும் மழை பெய்து வரும் நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அந்தந்த தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்த அறிவிப்பை மழையை பொறுத்து வெளியிடலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் விடுமுறை குறித்த அறியாமல் பள்ளிகளுக்கு வந்துவிட்டால் அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.